இஸ்லாமியர்-அருந்ததியருக்கு கூடுதல் பலன்: அரசு
சென்னை: உள்ஒதுக்கீட்டால் தமிழகத்தில் புதிதாக நடந்த காவலர் தேர்வில், இஸ்லாமியர், அருந்ததியர் சமுதாயத்தினர் கூடுதல் பலன் அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகக் காவல் துறையில் 2ம் நிலைக் காவலர் பதவியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2 ஆயிரத்து 800 ஆண்காவலர்கள், ஆயிரத்து 200 பெண் காவலர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது.
மேலும் பின்னடைவு காலிப் பணியிடங்களாக இஸ்லாமியரில் ஒரு ஆண் காவலரும், 46 பெண் காவலர்களும், பழங்குடியினரில் 10 பெண் காவலர்களும் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது.
மொத்தம் 4,057 இரண்டாம் நிலைக் காவலர்களைத் தேர்வு செய்வதற்காகத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் அண்மையில் தேர்வுகளை நடத்தியது.
இத்தேர்வின் மூலம் தற்போது 2 ஆயிரத்து 801 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், ஆயிரத்து 253 இரண்டாம் நிலைப் பெண் காவலர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 54 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், இஸ்லாமியர்க்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால், 99 இஸ்லாமிய ஆண்களும், 85 இஸ்லாமிய பெண்களும் ஆக மொத்தம் 184 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 84 அருந்ததிய ஆண்களும், 36 அருந்ததிய பெண்களும் என மொத்தம் 120 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications