சென்னை ஹைகோர்ட் பெயர் மாற்றம்: அரசு பரிசீலனை
டெல்லி: சென்னை உட்பட 4 உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டாலும், அங்குள்ள உயர்நீதிமன்றம் மதராஸ் ஹைகோர்ட் என்றே அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
இதேபோல, பாம்பே ஹைகோர்ட், கல்கட்டா ஹைகோர்ட், கௌஹாத்தி ஹைகோர்ட் என பழைய பெயர்களிலேயே இவை குறிப்பிடப்பட்டு வருகின்றன.
மெட்ராஸ்- சென்னையாக மாற்றப்பட்டது போல, பாம்பே மும்பையாகவும், கல்கட்டா கோல்கத்தாவாகவும், கௌஹாத்தி குவஹாத்தியாக மாறிய பின்னரும் உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் மாறாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சட்ட அமைச்சகம் இந்த உயர்நீதிமன்றங்களின் பெயர்களை முறைப்படி மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றும், இதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வக்கீல்களுக்கு தகுதிநிலை தேர்வு:
வழக்கறிஞர்களுக்குத் தகுதிநிலை தேர்வு நடத்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான சட்டமசோதாவை தயார் செய்ய நிபுணர்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சட்டப்படிப்பு முடித்து பட்டம் பெறுபவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்து தங்களது பணியைத் தொடரும் நிலை தற்போது இருந்து வருகிறது.
புதிய மசோதா அமலுக்கு வந்தால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் முன்னதாக தகுதி நிலைத் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்பின்னரே வழக்கறிஞராகப் பணியாற்ற முடியும்.
தரமற்ற சட்டக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதனால் தகுதியற்றவர்களும் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொள்வது போன்ற பிரச்னைகளை சரிசெய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2007ம் ஆண்டு நிலவரப்படி இந்திய சட்டக் கவுன்சிலில் 9 லட்சம் பேர் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications