ஹைத்தி பூகம்ப நிவாரணம்: இந்தியா 5 மில்லியன் டாலர்
டெல்லி: ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்டுள்ள ஹைத்தி பூகம்ப நிவாரண நிதியாக இந்தியா சார்பில் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி ஹைத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
ஹைத்தி நாட்டையே உலுக்கியுள்ள இந்த பூகம்பத்தால் போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டத்தட்ட எல்லா கட்டிடங்களுமே ஆட்டம்கட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீடுகள், அலுவலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை இடிந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் பிணமாகவே மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஏழை நாடாக கருதப்படும் ஹைத்தியில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஹைத்தி பூகம்ப நிவாரண நிதியாக முதல்கட்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
ஹைத்தி பிரதமர் ஜீன்மேக்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் நிலை...:
ஹைத்தியில் ஐ.நா அமைதி நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள் சுமார் 150 பேர் அங்கு பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பூகம்பத்தில் போர்டாபிரின்ஸ் நகரில் உள்ள ஐ.நா அலுவலகமும் மிஞ்சவில்லை. இடிபாடுகளில் சிக்கி ஐ.நா திட்ட தலைவர் உட்பட 14 அலுவலர்கள் இறந்ததாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும், 150 பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய குழுவினரின் நிலைமை குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
அதேபோல், போர்டாபிரின்ஸ் நகரில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடக்கும் பொதுப்பணிகளில் இந்திய பாதிரிமார்கள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பல தொண்டு நிறுவன ஊழியர்களும் அங்கிருந்தனர்.
இவர்களின் நிலை குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. ஹைத்தியில் இந்தியர் விவகாரத்தை கியூபா தூதர் கவனித்து வருகிறார். அவருடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்ட நிலையில் உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications