கள்ளக் காதலியுடன் தகராறு- வாலிபர் குத்திக் கொலை
நெல்லை: கள்ளக்காதலியின் வீட்டில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கண்ணாடித் துண்டால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாரின் மனைவி பார்வதி. செல்வகுமார் இறந்துவிட்டதை அடுத்து பார்வதிக்கு செல்வம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
செல்வம் ரயில்வே டிக்கெட் புரோக்கராக இருந்து வந்தார். பொங்கல் பண்டிகையை ஓட்டி நேற்று குடிபோதையில் இருந்த செல்வம் வழக்கம் போல் பார்வதியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. செல்வம் பார்வதியை தாக்கியதோடு அங்கிருந்த ஷோகேஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
அப்போது சென்னையில் இருந்து பொங்கலுக்காக ஊருக்கு வந்திருந்த பார்வதியின் அண்ணன்களான கிட்டுப்பிள்ளை, பரமசிவன் ஆகியோர் செல்வத்தை கண்டித்தனர். இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கிட்டு பிள்ளையும், பரமசிவனும் செல்வத்தை தாக்கி, அருகில் கிடந்த கண்ணாடியை எடுத்து செல்வத்தின் கழுத்தில் குத்தினர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுதொடர்பாக கிட்டு பிள்ளை, பார்வதி, பரமசிவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications