தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்தியர்களே - கசாப்

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக தனி கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வருகிறான் கசாப். ஒவ்வொரு முறையும் ஒரு கதையாக கூறி வருகிறான்.
இந்த நிலையில் இன்று அவன் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தபோது தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளுமே இந்தியர்கள்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினான்.
இதுகுறித்து அவன் நீதிபதி தஹிளியானியிடம் அளித்த வாக்குமூலத்தில், தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நான்கு பேருமே இந்தியர்கள்தான். ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். இன்னொருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.
3வது நபரான அபு இஸ்மாயில் மும்பையைச் சேர்ந்தவர் (இவனும், கசாப்பும்தான் சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி ஓடுகையில், கிர்காம் செளபாத்தி பகுதியில் போலீஸாரால் தாக்கப்பட்டனர். இதில் இஸ்மாயில் இறந்தான், கசாப் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது). நான்காவது நபரின் அடையாளம் தெரியாது, ஆனால் அவரும் இந்தியர்தான் என்றான் கசாப்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அபு இஸ்மாயில் மும்பையைச் சேர்ந்தவன் என்று எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்டார். அதற்கு கசாப், முகத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டேன் என்றான்.
அதற்கு நீதிபதி சிரித்தபடி, ஏன் அவனது முகத்தைப் பார்த்தால் மராத்தி வீரன் போலத் தெரிந்ததா என்றார்.
வாக்குமூலம் அளிப்பது முடிந்த பின்னர் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் செய்தியாளர்களிடம் பேசுகையில், முற்றிலும் அபத்தமான வாக்குமூலத்தை அளித்துள்ளான் கசாப். அவன் சொன்னதில் ஒரு வரி கூட உண்மை இல்லை. அத்தனையும் கட்டுக்கதை.
தொடர்ந்து அவன் பல்டி அடித்து வருகிறான். அந்த பல்டிகளில் இதுவும் ஒன்று. இதன் மூலம் இந்த வழக்கு பலவீனமாகாது, கசாப் தப்ப முடியாது என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications