'ஏர் டெக்கான்' கோபிநாத்தின் 'Simply Fly'!

விமானத்தில் பறக்க வேண்டுமென்றால் ஒன்று ஆபிஸ் காசாக இருக்க வேண்டும் அல்லது பெரும் பணக்காரராக இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அதை சாதாரண மக்களுக்கும் கைக்கு எட்டச் செய்தது கேப்டன் கோபிநாத் உருவாக்கிய ஏர் டெக்கான் நிறுவனம் தான்.
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஒரு விமான நிறுவனத்தை நிறுவி, அதை நடத்த கஷ்டப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி நஷ்டத்தை சந்தித்து, சமாளிக்க முடியாமல் தவித்த கோபிநாத்திடம் இருந்து அந்த நிறுவனம் கிட்டத்தப்பட்ட பறிக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதை வாங்க ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி ஒரு பக்கம் பேச்சு நடத்திய நிலையில் சில பெரும் அரசியல் புள்ளிகள் தலையிட்டு கிங் பிஷ்ஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவிடம் அதை விற்கச் சொல்லி பிரஷ்ஷர் தர கோபிநாத் பட்ட பாடுகள் ஏராளம்.
இறுதியில் தான் உருவாக்கிய அந்த நிறுவனத்தை கடன் சுமை மற்றும் மனம் முழுக்க சுமையுடன் விற்ற கோபிநாத், அந்த கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நாட்டில் போய் வசதியாக ஆகிவிடாமல் இன்னொரு சரக்கு விமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட பீனி்க்ஸ் பறவை மாதிரி தான் கோபிநாத்தும். அவர் தனது வாழ்க்கை சரிதத்தை 'Simply Fly' என்ற பெயரில் நூலாக வடித்துள்ளார். இவரது ஏர் டெக்கன் நிறுவனத்தின் ஸ்லோகனும் இது தான்.
குக்கிராமம் ஒன்றில் பிறந்து, மாட்டு வண்டியில் பயணித்த ஒரு சாதாரண கிராமத்துச் சிறுவன், விமானங்களுக்கு அதிபதி ஆன கதையை இதில் அழகாக விவரித்துள்ளார் கோபிநாத்.
சிறு தொழிலதிபராக மாறி, பின்னர் இந்தியாவின் முதலாவது குறைந்த கட்டணதனியார் விமான சேவையை தொடங்கிய தனது வரலாற்றையும், தான் பட்ட கஷ்டங்கள், சவால்களையும் இந்த நூலில் மிக அழகாக கூறியுள்ளார் கோபிநாத். ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த போராட்டங்கள், ஆனால் ஏற்பட்ட பலன்களால் தான் அடைந்த மகிழ்ச்சி ஆகியவற்றை கோபிநாத் விவரித்துள்ள விதம் சிறப்பாக உள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி வந்த கோபிநாத் 70களில் அதிலிருந்து விலகினார். பின்னர் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அவர் அங்குள்ள வறண்டு போயிருந்த நிலத்தை உழுது செம்மையாக்கி அங்கு பட்டுப் பூச்சி வளர்ப்புப் பண்ணையைத் தொடங்கினார். சிறந்த முறையில் பட்டுப் பூச்சி வளர்ப்பை மேற்கொண்டதற்காக ரோலக்ஸ் பரிசையும் பெற்றார் கோபிநாத்.
ராணுவத்திலிருந்து வந்து விவசாயியாக அதிலிருந்து விமானத் துறைக்குக்குள் நுழைந்தவர் இந்த கேப்டன்.
தொடங்கிய நான்கு ஆண்டுகளில் ஏர் டெக்கான் நிறுவனம் 65 இடங்களுக்கு தனது சேவையை வியாபித்து வளர்ந்திருந்தது. இவற்றில் 12 நகரங்கள் அதுவரை விமான சேவையையேய கண்டிராதவை என்பது.
இவ்வாறாக நடக்கவே முடியாது என்று நினைத்திருந்த விஷயங்களை நடத்திக் காட்டிய கோபிநாத், தான் கடந்து வந்த பாதையை தனது நூலில் அழகாக எடுத்துரைத்துள்ளார் கோபிநாத். தனது ஆசைகள், லட்சியங்கள், சாதனைகள், இலக்குகள் என அனைத்தையும் எளிமையான வார்த்தைகளில் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் தொகுத்துள்ளார் கோபிநாத்.
பெங்களூரில் மனைவி, இரு மகள்களுடன் வசித்து வரும் கோபிநாத்தின் இந்த 'Simply Fly' வாழ்க்கை வரலாறு நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்றாகவே தோன்றுகிறது.
" target="_blank">Buy 'Simply Fly' by Capt. Gopinath @ 30% discount
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications