லட்டு குறைப்பு-திருப்பதில் பக்தர்கள் ரகளை-கவுண்டர் சூறை
திருப்பதி: கூட்ட நெரிசல் காரணமாக லட்டு எண்ணிக்கையை அதிகாரிகள் குறைத்ததால் கோபமடைந்த பக்தர்கள், திருப்பதி கோவில் லட்டு வழங்கும் கவுண்டரைத் தாக்கி சூறையாடினர்.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பொங்கல் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதியது. மேலும் அய்யப்ப பக்தர்களும் குவிந்ததால் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.
இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தரிசன கியூவும் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு கிடக்கிறது.
இப்படி பெரும் கூட்டம் வந்து விட்டதால் எதிர்பார்த்த அளவுக்கு லட்டு ஸ்டாக் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆளுக்கு ஒரு லட்டு மட்டுமே விநிநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி தரப்பட்டது.
ஆனால் பக்தர்கள் 2 லட்டு தர வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் லட்டு கவுண்டர் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தடுப்பு கம்பிகளையும் பிடுங்கி எறிந்தனர்.
தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications