காஷ்மீர் எல்லையில் சண்டை-தீவிரவாதி சுட்டு கொலை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையில், ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவனது அடையாளத்தை காணும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த துப்பின் அடிப்படையில், நடோலா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
இன்னும் 2 அல்லது 3 தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, 3 தோட்டா மாகசின்கள், ஒரு ரேடியோ செட், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications