ஆஸ்திரேலியா: இந்தியர் மீது கற்பழிப்பு புகார்

பால் ராஜேந்திரன் என்ற இந்தியர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு வருமாறு:
பால் ராஜேந்திரன் 'மைஸ்பேஸ்' தளத்தில் தன்னை டா பெர்லா உள்ளாடைகள் நிறுவன ஊழியர் எனக் கூறிக் கொண்டு ஜேம்ஸ் கார்ட்டர் என்ற பெயரில் போலியான புரொஃபைலை உருவாக்கியுள்ளார்.
இதன் மூலம் மாடலிங் செய்யும் ஆர்வம் கொண்ட 23 வயது பெண் ஒருவரை தொடர்பு கொண்டு நல்ல வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
கடந்த மார்ச் மாதம் இருவரும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்தனர். அப்போது அப்பெண் தன்னை மாடலிங் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஹன்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள அலுவலகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அறையில் பெண்ணை உட்கார வைத்த பால் ராஜேந்திரன், பலவந்தப்படுத்தி மது கொடுத்தார். பின்னர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
மது அருந்தியிருந்ததால் பால் ராஜேந்திரனிடம் இருந்து தப்பிக்க முடியாமல், அவஸ்தைப்பட்ட அப்பெண் சிறிது நேரம் கழித்து அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சிட்னி கோர்ட்டில் இன்று இவ்வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
இருதரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். அப்பெண்ணை உடல்ரீதியாக காயப்படுத்தி பாலியல் குற்றம் புரிந்ததாகவும், அதை வெளியே சொல்லாமல் இருக்குமாறு மிரட்டியதாகவும் ராஜேந்திரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல், அப்பெண்ணை பலவந்தப்படுத்தவில்லை. இருவரும் மனமுவந்து பாலியல் உறவு கொண்டதாக கூறினார்.
வழக்கு தொடர்ந்து நடக்கிறது. மாடலிங் துறையில் புதிதாக நுழைபவர்கள் இண்டர்நெட்டில் ஏமாற வேண்டாம் என பெண்களுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications