லண்டனில் ராஜபக்சே மகன் போதையில் குத்தாட்டம்!
சில தினங்களுக்கு முன்னர் நமல் ராஜபக்சே லண்டன் சென்றிருந்தார். இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் எழுந்தன.
ஏற்கனவே கோத்தபயாவின் மனைவி பெரும் பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நமலின் லண்டன் பயணத்தின்போதும் பல முக்கிய விவகாரங்கள் கையாளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கையில் எழுந்துள்ளது.
பெரும் பணத்துடன் நமல் லண்டனுக்கு வந்துள்ளதாகவும், இலங்கையில் இருந்து ராஜபக்சே குடும்பம் மக்களிடமிருந்து சுருட்டி வைத்துள்ள பணத்தில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இவர் லண்டன் கேளிக்கை விடுதி ஒன்றில் மது அருந்தி களியாட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கை தூதரகத்திற்காக வேலைசெய்யும் வயதான பெண்ணுடன் சேர்ந்து டான்ஸும் ஆடியுள்ளார்.
அத்துடன் நில்லாமல், போதை தலைக்கேறிய நமல் வீதியிலும் இறங்கி மது அருந்தியது மட்டுமல்லாது, லன்டனில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தினுள்ளும், வெளியேயும் நடனம் ஆடியுள்ளார்.
இவருக்கு பாதுகாப்பு வழங்க இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் இவர் நடத்தை கண்டு அதிர்ந்து போனார்கள் எனவும் தெரிகிறது. இவருக்கு பாதுகாப்பு வழங்குவதே பெரும் சிரமமாகிப் போனதாக இணையதள செய்திகள் கூறுகின்றன. (படம் நன்றி: அதிர்வு.காம்)
'காட்டாட்சி நடத்தும் ராஜபக்சே': ஐக்கிய தேசிய கட்சி:
இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே காட்டாட்சி நடத்துகிறார் என்று இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜலயத் ஜயவர்தன சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழ்மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் ராஜபக்சேவின் விருப்ப படிதான் எல்லாம் நடக்கிறது. அங்கு காட்டாட்சி நடக்கிறது. ஜனநாயக முறைப்படி எதுவும் நடைபெறவில்லை.
பத்திரிகைகளுக்கு சுதந்திரம் இல்லை. பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம், காவல்துறை, மனித உரிமை ஆணையம் என எந்த அமைப்பும் சுந்திரமாக செயல்படவில்லை.
இலங்கையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவற்றை சுட்டிக்காட்டினாலும் உரிய நடவடிக்கை இல்லை.
தமிழர்களுக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தேர்தலில் சரத்பொன்சேகா வென்றால் ஜனநாயகம் மலரும். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி













Click it and Unblock the Notifications