ஜாதிகள் ஒழிய காதல் திருமணம் செய்வீர்..கருணாநிதி

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் தங்கை மகன் கார்த்திகேயன்-ரேவதி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே வாழ்த்தும் போது, இது காதல்-கலப்பு திருமணம் என்றும், “ஸ்டுப்பிட்" என்ற எஸ்.எம்.எஸ். வார்த்தையுடன் தான் இந்தக் காதல் ஆரம்பமானதாகவும் கூறினார்.
பொதுவாகவே காதல் என்பதே முட்டாள்தனம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது முழுமையான 'அறிவின் எல்லை'.
இங்கே கலப்பு திருமணத்தை வாழ்த்தி பலர் பேசினார்கள். ஆனால் உண்மையாகவே எத்தனை பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதை நெஞ்சை தொட்டு பார்க்க வேண்டும். கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா ஆகியோர் வழி காட்டினார்கள். சமத்துவம் தேவை என்பதால் தான் காதல்-கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறோம்.
உண்மையான சமத்துவம் வளர வேண்டும் என்றால் காதல், கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும், அதற்கு ஊக்கமும் உறுதியும் நண்பர்கள், தோழர்கள் பெற வேண்டும்.
சமத்துவபுரங்கள் ஏழை, எளியோர்களுக்காக மட்டும் அளிக்கப்படுவதல்ல. சமத்துவபுரத்தில் காதல்-கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும். அதன் மூலம் சமத்துவம் வளர வேண்டும். ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் இருக்கிறது என்றால் 60 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற வீடுகள் பிற்பட்டோருக்கும் இதில் 10 சதவீதம் உயர் ஜாதியினருக்கும் வழங்கப்படுகிறது.
அங்கு குடியிருப்பவர்கள் மூலம் காதல்- கலப்பு திருமணங்கள் நடந்து சமத்துவம் வளர வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒரே இனம் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
ஜாதி ஒழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான்100, 200, 300 என சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றன. என்றாலும் ஜாதி ஒழிய வேண்டும் என்பது வெறும் வார்த்தை ஜாலமாக உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு இத்தனை பேர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் நாம் எல்லோரும் கையை உயர்த்துவோம். ஆனால் கூட்டம் முடிந்து, விழா முடிந்து வெளியே செல்லும் போது 10 பேர், 20 பேர் என்று அந்தந்த ஜாதிவாரியாக ஒன்றாக வெளியே செல்வார்கள். இந்த ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்.
பெரியார், அண்ணா ஆகியோர் ஜாதி மறுப்பு என்ற கோஷத்தை சுயமரியாதை இயக்கங்கள் மூலம் சற்று கடுமையாகவே கூறினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஏராளமான கலப்பு திருமணங்கள், சுய மரியாதை திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இது நமது இயக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்துக்கு கிடைத்த மாபெறும் வெற்றி,
அந்த வகையில் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மணமக்களை எல்லா வளமும் பெற்று வளர வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications