சென்னை: நைஜீரிய வாலிபர் கொலை- கூட்டாளிகள் கைது
சென்னை: நைஜீரிய வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர். போதை பொருள் விற்ற பணத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டதால் கூட்டாளிகளே அடித்துக்கொன்றதாக தெரியவந்துள்ளது
தாம்பரத்தை அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் சாந்தி நிகேதன் காலனியில் வாடகை வீட்டில் நைஜீரிய வாலிபர் சாம்சன் ஆருமக் என்பவர் தங்கி இருந்தார்.
கடந்த 1ம் தேதி இந்த வீட்டிற்கு 2 நைஜீரிய வாலிபர்கள் வந்தனர். அப்போது வீட்டுக்குள் அடிதடி சத்தம் கேட்டது. பின்னர் இரண்டு வாலிபர்கள் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
வீட்டு உரிமையாளர் இதுபற்றி தகவல் அறிந்து மாற்று சாவி மூலம் வீட்டை திறந்தார். அப்போது, குளியலறையில் நைஜீரிய வாலிபர் இமானுவேல் பென்னட் என்பவர் கைகால் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சாம்சனின் வீட்டில் இமானுவேல் கொல்லப்பட்டதற்கு என்ன காரணம், சாம்சன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். தப்பியோடிய வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாம்சனை அவரது கூட்டாளிகள் ஹென்றி மற்றும் சான்ட்ரோஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'நாங்கள் போதை பொருள் வாங்கி விற்று வந்தோம். கடந்த 2009ம் ஆண்டு சாம்சன் என்னிடம் 300 கிராம் ஹெராயின் தந்து ஆஸ்திரேலியாவில் விற்க சொன்னான்.
நான் போக முடியாததால் வேறு ஒருவரிடம் கொடுத்து விற்க சொன்னேன். இதில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் எங்கள் மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.
எனக்கும் சாம்சனுக்கும் பணம் கிடைக்கவில்லை. என்னையும் இம்மானுவேல் அடித்து உதைத்தார். என் அப்பா அம்மாவை மிரட்டியும் பணம் வாங்கினர்.
இதனால் இம்மானுவேலை சாம்சன் வீட்டிற்கு வரவழைத்து அடித்து உதைத்து கொன்றோம்' எனக் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications