கூடுதல் கட்டணம் செலுத்தும் தொழிற்சாலைகளுக்கு மாலைநேர மின் சப்ளை
சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தும் தொழிற்சாலைகளுக்கு, மாலைநேர மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திக்கு உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்கள் தேவையில் 20 சதவீத அளவுக்கு குறைவான மின்சாரம் மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, மாலை நேர தடையை நீக்க வேண்டும் என்றும் 20 சதவீதம் உபயோகத்தைக் குறைப்பது என்ற கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோரில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.7க்கு மிகாமல் செலுத்த முன்வருவோருக்கு இந்த சலுகையை வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது.
இதைச் செயல்படுத்துவதற்காக, உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோரின் தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் மின்சாரம் வாங்குவதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தொழிற்சாலைகள் தரப்பினரும் மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும். இதனால் 2,373 தொழிற்சாலைகள் பயன்பெறும். இந்த ஆலைகளுக்கு 990 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தேவைப்படும் மின்சாரம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications