வருகிறது மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு!
நாக்பூர்: மூன்றரை ஆண்டு கல்வி மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில்,
மூன்றரை ஆண்டு கால படிப்பு மட்டுமே கொண்ட குறுகிய கால எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் படிப்பு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும்.
மாணவர்கள் இந்தப் படிப்பை படித்து முடித்ததும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.
அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யவும் பயிற்சி பெறுவார்கள். ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போதுள்ள டாக்டர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு இந்த திட்டத்தை வகுத்திருக்கிறது.
டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க இப்போதுள்ள அரசு மருத்துவமனைகளில் மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 150 என்பது 250 ஆக உயர்த்தப்படும்.
முதுகலை மருத்துவப் படிப்பில் இப்போது ஒரு மாணவருக்கு மட்டுமே ஆசிரியர் 'கைட்' ஆக இருக்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதி திருத்தப்பட்டு ஒவ்வொரு 'கைடும்' தலா 2 மாணவர்களைத் தன் பொறுப்பில் ஏற்கலாம் என்ற வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதன்மூலம் முதுகலை பட்ட வகுப்பில் பயிலும் மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை இனி இரட்டிப்பாகிவிடும்.
டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியின் தரத்தில் பிற மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஆசாத்.
அரசு பள்ளிகளில் எப்படி எம்பிபிஎஸ் படிப்பை சொல்லித் தர முடியும் என்று தெரியவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications