காபூலில் தலிபான்கள் பயங்கரத் தாக்குதல் - 9 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் ஒரு வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர் தலிபான் தீவிரவாதிகள். இன்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று தற்கொலைப் படைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் என பலமுனைத் தாக்குதலில் ஈடுபட்டனர் தீவிரவாதிகள். இதனால் காபூல் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
அதிபர் மாளிகை அருகே தற்கொலைப் படைத் தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்தான். இதையடுத்து தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டையும், குண்டுவெடிப்பையும் மேற்கொண்டனர்.
அதிபர் மாளிகையின் தெற்கு நுழைவாயிலை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கதுல் நடத்தினர். ராக்கெட்களை வீசியும் தாக்குதல் நடந்தது.
அதிபர் ஹமீத் கர்சாயின் தலைமையில் 14 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கவிருந்த நிலையில் இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், 20 போராளிகள் தற்கொலைப் படை உடையுடன், காபூலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அரசுக் கட்டடங்களையும் அவர்கள் தாக்கினர் என்று கூறியுள்ளார்.
இன்றைய தாக்குதலில் வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து போகும் செரீனா ஹோட்டல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், நீதித்துறை அமைச்சக கட்டடம் ஆகியவற்றையும் தலிபான்கள் விடவில்லை.
தலிபான்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீண்ட நேரம் நடந்தது.
தலிபான்கள் குறி வைத்துத அதிபர் மாளிகை, மத்திய வங்கி, சுரங்க அமைச்சகம், செரீனா ஹோட்டல், தொழில்துறை அமைச்சகக் கட்டடம் ஆகியவையே என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியத் தூதரகத்தில் உள்ள அனைவரும் பத்திரமாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. 38 பேர் படுகாயமடைந்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications