துபாய் புர்ஜ் கலீஃபா கட்டுமானப் பணியில் பங்காற்றிய தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 4ம் தேதி திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானப் பணியில் தமிழ் நிறுவனங்கள் மற்றும் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் முக்கிய கட்டிட ஒப்பந்தகாரர் எஸ்.பி.ஏ. என்றழைக்கப்படும் சாம்சங்- பிசிக்ஸ்- அரப்டெக் (SAMSUNG- BESIX- ARABTEC JV ) எனும் கொரிய மற்றும் அரபு கூட்டு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான ஒப்பந்த நிறுவனங்கள் உண்டு. இவற்றில் தொழிலாளர்கள் முதல் மேலாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் பிரதான நிறுவனமான EHV என்றழைக்கப்படும் ETA VOLTAS HITACHI JV கூட்டு நிறுவனம் தான் MEP எனப்படும் மெக்கானிக்கல் மற்றும் எலட்ரிக்கல் பணிகளை செய்து வருகிறது. இந்த கூட்டு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடினமான பணிகளை செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

இப்பணியில் கோவை நாகராஜ், பயர் பைட்டிங் என்ஜினியர், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சீனியர் பிளம்பிங் டிசைனர் முஹம்மது ரஃபி, சென்னையைச் சேர்ந்த எலக்ட்ரிகல் கமிஷனிங் என்ஜீனியர் கிருஷ்ணமூர்த்தி,
சென்னையைச் சேர்ந்த கட்டுமான மேலாளர் சந்திரசேகரன், சென்னையைச் சேர்ந்த சீனியர் பிளம்பிங் டிசைன் என்ஜீனியர் ராமன், சென்னையைச் சேர்ந்த அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கிருஷ்ணன், கட்டுமான மேலாளர் மணி ஆகியோர் முக்கியமானவர்கள்.

இக்கட்டிடம் மார்ச் 2005ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2010ல் முடிக்கப்பட்டது. இதன் உயரம் 828 மீட்டர். இதில் 160 தளங்களும், அதன் மேல் மூன்றடுக்கு தளங்களும் உள்ளன.

இக்கட்டிடத்தில் 124 வது தளத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தளத்தை சென்றடைய 60 வினாடிகள் தான் ஆகும்.

154வது தளத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 3,000 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. குழந்தைகளுக்கு பிரத்யோகமாக இரண்டு தளங்களைக் கொண்ட பெவிலியன், விழாக்களைக் கொண்டாட இரண்டு தளங்களைக் கொண்ட தனி கட்டிட்டமாக ஃபங்ஷன் ஐலேண்ட், இக்கட்டிடட்த்தின் எல்லா இயந்திரங்களும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாறும் முறையில் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தின் கட்டுமானப் பணியில் தமிழர்களின் உழைப்பும், வியர்வையும் முக்கிய இடம் பிடித்திருப்பது நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

தகவல்-பொறியாளர் முஹம்மது ரஃபி (பாபநாசம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+