மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...!

டிடிஎச் விஷயத்திலும் அப்படியே. டிடிஎச் ஒலிபரப்பு வசதியை வாடிக்கையாளர்கள் பெற ஒரு செட்டாப் பாக்ஸ் தரப்படுகிறது.
ஒரு நிறுவனம் தரும் செட்டாப் பாக்ஸை இன்னொரு நிறுவனத்தின் டிடிஎச் சரிவீஸுக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவற்றின் அமைப்பை மாற்றித் தருகின்றன இன்றைக்கு இந்தியாவில் உள்ள டாடா ஸ்கை, ஏர்டெல், சன், டிஷ்னெட், ஜீ, ரிலையன்ஸ் பிக்.... போன்ற டிடிஎச் நிறுவனங்கள்.
இந்த செட்டாப் பாக்ஸ்களின் விலை குறைவு என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், உண்மையில் குறைந்தபட்சம் ரூ.4000 வரை வைத்து விற்கப்படுகின்றன. வெறும் 1000 ரூபாய் போதும் என்று விளம்பப்படுத்திவிட்டு, 'பொருத்தும் கட்டணம் தனி' என்று கணணுக்குத் தெரியாத அளவு குட்டி எழுத்தில் பிரசுரிக்கும் தில்லுமுல்லு தொடர்ந்து கொண்டே உள்ளது.
ஆனால் உண்மையில், எந்த நிறுவனத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கினாலும், அந்த நிறுவன சேவை பிடிக்கவில்லை எனும்போது, வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொண்டு, அதே செட்டாப் பாக்ஸை உபயோகிக்கலாம். அப்படித்தான் இந்த பாக்ஸ்கள் தரப்பட வேண்டும் என்று விதிமுறையே உள்ளது.
ஒரு முறை செட்டாப் பாக்ஸ் வாங்கினால் எந்த நிறுவனத்தின் Conditional Access Module (CAM) கார்டையும் பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதி இல்லாத செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் தலையில் திணித்து, தொடர்ந்து அவர்களை தங்களிடமே வைத்திருக்கும் டெக்னிக்தான் இப்படிப்பட்ட மோசடியை தொடர்ந்து செய்ய வைத்துள்ளது.
இதுகுறித்து ஏராளமான புகார்கள் ஆதாரத்துடன் வந்துள்ளதைத் தொடர்ந்து, டிடிஎச் சேவையை அளிக்கும் டாடா ஸ்கை, ரிலையன்ஸ் பிக், டிஷ் டிவி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனைத்துக்கும் காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா (Competition Commission of India -CCI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் சிசிஐயின் விதிமுறை 3 மற்றும் 4யை அப்பட்டமாக மீறி, மக்களைச் சுரண்டி வருவதாக சிசிஐ இயக்குநரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்ல, TRAIன் விதிமுறைகளையும் கூட இந்த டிடிஎச் ஆபரேட்டர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இம்மாதிரி விதி மீறல்களுக்கு தண்டனையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 10 சதவிகிதம் அளவு அபராதம் விதிக்கப்படும். ஆனால் பல முனை விதிமீறல்களை டிடிஎச் நிறுவனங்கள் நடத்தியுள்ளதால், சிசிஐ குழுவின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.
அடுத்த 15 தினங்களுக்குள் உரிய விளக்கத்தை இந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும், இதற்கு என்ன தண்டனை என்பதை பின்னர் தீர்மானிப்போம் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications