11,500 பேரை நியமிக்கும் டிசிஎஸ்
மும்பை: இந்தியாவின் முதல் நிலை ஐடி நிறுவனம் டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்- டிசிஎஸ் 2010 இறுதிக்குள் 11,500 பேரை பணியமர்த்துகிறது.
இவர்கள் 8500 பேர் பயிற்சி நிலையிலும், 3000 பேர் லேட்டரல் என்ட்ரி முறையிலும் நியமிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து டிடிஎஸ்ஸின் சர்வதேச மனித வள துணைத் தலைவர் அஜயோந்திர முகர்ஜி கூறுகையில், "2010 மூன்றாம் காலாண்டில் டிசிஎஸ் ஏற்கெனவே 8703 பேரை பயிற்சி அடிப்படையில் நியமித்துள்ளது. 3000 பேரை லேட்ரல் என்ட்ரி முறையில் தேர்வு செய்துள்ளோம்.
இவர்களைத் தவிர, அடுத்த காலாண்டிலேயே கூடுதலாக மேலும் 11500 பேரை நியமிக்க உள்ளோம். இவர்களில் 3000 பேர் லேட்டரல் என்ட்ரி அடிப்படையில் நியமனம் பெறுவார்கள். மீதி 8500 பேருக்கு பயிற்சி முறை நியமனம் தரப்படும்.
இது தவிர அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் மையங்களிலும் பணியாளர் நியமனம் இருக்கும்.
ஐடி துறையில் டிசிஎஸ்ஸின் பங்களிப்பு திருப்திகரமான முறையில் வளர்ந்து வருகிறது. ஐடி சர்வீஸில் 11.5 சதவிகிதமும், பிபிஓ பிரிவில் 10.5 சதவிகிதமும் டிசிஎஸ்ஸின் பங்களிப்பாகும்," என்றார் முகர்ஜி.
நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 32 வாடிக்கையாளர்களை டிசிஎஸ் பெற்றுள்ளது. இவர்களில் 7 வாடிக்கையாளர்கள் 50 லட்சம் டாலருக்கு மேல் கட்டணம் செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications