நிச்சயித்த காதலரை கழற்றி விட்டு விட்டு 2வது காதலரை மணந்த பெண்
சென்னை: 2 பேரைக் காதலித்து வந்த ஒரு பெண், அவர்களில் தான் 2வதாக காதலித்த நபரை மணக்க முடிவு செய்தார். ஆனால் வீட்டிலோ முதல் காதலருடன் திருமணம் நிச்சயித்தனர். ஆனாலும் மனம் தளராமல், செமத்தியான ஒரு டிராமாவைப் போட்டு முதல் காதலரை கழற்றி விட்டு விட்டு 2வது காதலரை கல்யாணம் செய்து கொண்டார் அந்தப் பெண்.
திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு.
எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் முதலில் சென்னை அயனாவரத்தில் பெற்றோருடன் வசித்தார். அப்போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காதல் வளர்ந்து வேரூன்றி நிலைத்து நின்றது.
இந்த நிலையில் இந்தக் காதலில் வெடிப்பு கிளம்பியது. வேறு ஒருவரை காதலிக்கத் தொடங்கினார் அலமேலு. இதனால் முதல் காதலர் வெறுத்துப் போய் ஒதுங்கி விட்டார்.
ஆனால் அலமேலுவின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் அலமேலு. ஏன் அதிர்ச்சி அடைந்தார் என்றால் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வேறு யாருமி்ல்லை, அலமேலு முதலில் காதலித்த நபரேதான்.
கல்யாணத்திற்கு அப்போதைக்கு தலையை ஆட்டி வைத்தார் அலமேலு. இரு்நதாலும் மனதுக்குள் 2வது காதலரை மணக்கவே விரும்பினார். இதையடுத்து சூப்பராக ஒரு திட்டத்தைத் தீட்டினார்.
தனது 2வது காதலரை விட்டு முதல் காதலரின் பெற்றோரிடம் செல்போனில் பேச வைத்தார். உங்க மகன் தாலி மட்டும்தான் கட்ட முடியும், குடும்பம் நடத்தப் போவது நான்தான் என்று சினிமா பாணியில் அவர் மிரட்டவே, குழம்பியும், அதிர்ந்தும் போயினர் முதல் காதலரின் பெற்றோர்.
நேற்று காலையில் திருவேற்காடு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முதல் காதலரின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துக் கோரிக்கை விடுத்தனர்.
போலீஸார் விசாரணையில் இறங்கினர். அலமேலுவை அழைத்து விசாரித்தனர். அவரும் அப்பாவி போல நடித்து, மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்றால் நான் என்ன செய்ய முடியும், நிறுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதிரடியாக அதே முகூர்த்தத்தில் தனது 2வது காதலரை அழைத்து இவரை மணந்து கொள்கிறேன் என்று அவர் கூற, பெற்றோரும், அதை ஏற்று கல்யாணத்தை நடத்தி முடித்தனர்.
கல்யாணத்திற்குப் பிறகுதான் அலமேலுவின் அட்டகாசமான நாடகம் அனைவருக்கும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications