ஆஸி: தாக்கப்பட்ட இந்திய டாக்சி டிரைவர்-2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்சி டிரைவர் தாக்கப்பட்ட வழக்கில் 2 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவில் நான்கு டாக்சி டிரைவர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு சம்பவத்தில் உடனடியாக தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கீலோங் நகரில் ஒரு 23 வயது இந்திய டாக்சி டிரைவரை, அந்த டாக்சியில் பயணித்த இரண்டு ஆஸ்திரேலியர்கள் தாக்கிக் காயப்படுத்தினர்.

ஸ்பார்க்ஸ் சாலை மற்றும் பிரின்சஸ் ஹைவே சந்திப்பில் வைத்து இவர்கள் அந்த இந்தியரைத் தாக்கினர். இதில் அவருடைய முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ராபர்ட் ஹார்வி (25), ஆண்ட்ரூ மேடன் (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நார்லேன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+