வால்பாறை-சிறுவனை கொன்ற சிறுத்தை சிக்கியது
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுவனை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வாழைத்தோட்டம், கக்கன் காலனி, கருணாநிதி நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளையொட்டிய வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.
இவை குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடு, பன்றி, நாய், பூனைகளை வேட்டையாடுவது வழக்கம். சில நேரம் மனிதர்களையும் தாக்கி வருகின்றன.
கடந்த 10ம் தேதி வால்பாறை அருகே உள்ள டோனிமுடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாபுகுமார் என்வரின் மகன் முகேஸ்வரனை (5) ஒரு சிறுத்தை தாக்கிக் கொன்றது.
இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
டோனிமுடி எஸ்டேட் அருகேயுள்ள வனப் பகுதியில் இறைச்சியுடன் கூடிய ராட்சத கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரமாக இந்தக் கூண்டுப்பக்கம் சிறுத்தை ஏதும் வரவில்லை.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.15 மணியளவில் இரைதேடி வந்த ஒரு சிறுத்தை கூண்டில் நுழையவே அது தானாகவே பூட்டிக் கொண்டது.
கூண்டில் சிக்கிய சிறுத்தை வெளியேற போராடிய நிலையில் வனத்துறையினர் விரைந்து வந்து அதைப் பிடித்தனர்.
5 வயதான அந்த சிறுத்தை சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் அது அடைக்கப்படவுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications