சாமி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- 50 பேர் கைது
திருவண்ணாமலை: ஆதிதிராவிடர் காலனி அருகே சாமி ஊர்வலம் தீபாராதனைக்காக நிறுத்தப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து நடந்த சாலைமறியலில் ஊராட்சித் தலைவர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கணணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனி அருகே வந்த போது அங்கு தீபாராதனை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு கோஷ்டி மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த 2ம் நாள் ஊர்வலத்திலும் மோதல் வெடித்தது.
மோதலுக்கு காரணமான அம்மாப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று காலை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சுமார் 50 பேர் வேலூர்-ஆரணி ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு உடன்படாததை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications