கடையநல்லூர் சுகாதார சீர்கேடு-அதிமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

கடையநல்லூர்: கடையநல்லூரில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து இன்று அ.தி்.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது.

கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காய்ச்சலை கட்டுபடுத்திடவும், போதுமான சுகாதார நடவடிக்கையை எடுக்கவும் வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில் விஷக்காய்ச்சல் காரணமாக 20 பேர் பலியானதாகவும், இதற்கு நகராட்சியில் காணப்படும் சுகாதார சீர்கேடு தான் காரணம் என்றும் தெரிவித்து கடையநல்லூர் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகில் இன்று காலை நெல்லை புறநகர் அதிமுக சார்பில் 10 மணிக்கு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், சுகாதாரத்தை மேம்படுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதிமுக தேர்தல் பிரிவு இணை செயலாளரும், அமைச்சருமான நயினார் நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+