புதிய சட்டசபைக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட கோரிக்கை
நெல்லை: புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபை கட்டட வளாகத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் பெயர் சூட்ட வேண்டும் என்று எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
நெல்லையில் இந்த கூட்டமைப்பின் சார்பில் இடஓதுக்கீடு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பாலசுந்தரம், தென்மண்டல துணை செயலாளர் முருகேசன், துணை தலைவர் மணி, இணை செயலாளர் மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். மரபு சாரா எரி்சக்தி துறை முதன்மை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி பேசினார்.
அப்போது, அனைத்து துறைகளிலும் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டினை அரசியல் சாசன சட்டப்படி அமுல்படுத்த வேண்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான எஸ்சி, எஸ்டிக்கான பின்னடைவு காலியிடங்களை சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
புதிய சட்டசபை கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும். சட்டசபை வாளகம் முன் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications