இந்து விரோத போக்கைக் கையாளும் திமுக - பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
சின்னாளபட்டி: தி.மு.க. அரசு இந்து விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி அருகே, பெருமாள்கோயில்பட்டியில், பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது நடைபெற்ற தாக்குதலில் ஆண்டி(45) என்பவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த பகுதியில் ஜாதி மற்றும் மத கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் பெருமாள்கோயில்பட்டி வருகை தந்து, சம்பவ இடம், சர்ச்சைக்குரிய கோயில் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெருமாள்கோயில்பட்டியில் மதப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இதனால் தான் ஆண்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால், இறந்த ஆண்டியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலம் முதல் தற்போது வரை தி.முக. அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகின்றது. இதனால் தான் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications