பொட்டு அம்மானும் உயிரோடு இருக்கிறார்: திருமாவளவன்
சென்னை: பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் உயிரோடு தான் இருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று இணையதள செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புலிகளின் உளவுப்படை தளபதியான பொட்டு அம்மானும் உயிரோடுதான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன் கூறியுள்ளதாவது: பிரபாகரனுடைய தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்த எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றியும் மறக்காமல் கேட்டனர்.
பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலான நபர்கள் கூறினார்கள்.
பிரபாகரனும், பொட்டு அம்மானையும் மரணத்தால் கூட பிரிக்க முடியாது. 2004ல் நான் வன்னியில் பிரபாகரனை சந்தித்தபோது பொட்டு அம்மானை எனக்கு பிரபாகரன் அறிமுகப்படுத்தினார்.
அவர்கள் இருவரும் எவ்வளவு நம்பிக்கையுடனும், நட்புறவுடனும் இருக்கிறார்கள் என்று அப்போது என்னால் அறிய முடிந்தது. பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications