டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதி கோரி வழக்கு!
சென்னை: பஸ் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு சங்க செயலாளர் அன்புராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு:
அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், செல்போனைக் கூட கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் கண்டிப்பு செய்கிறார்கள்.
நகரத்திற்குள் பஸ் ஓட்டக் கூடியவர்கள் வேலைக்கு புறப்பட்டுச்சென்ற 16 மணி நேரம் கழித்துதான் வீட்டிற்குப் போக முடியும். நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்களை ஓட்டக்கூடியவர்கள் 32 மணி நேரம் முதல் 48 மணி நேரம் கழித்துதான் வீட்டிற்கு செல்ல முடியும்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளவோ, இன்ப, துன்ப தகவல்களை அறியவோ முடியாத நிலை உள்ளது. அவசரமான தகவல்களை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.
டிரைவர்கள் சாப்பாட்டு நேரத்திலோ, வீட்டிற்கு செல்லும் வழியிலோ செல்போனில் பேச முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, வேலைக்கு செல்லும் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். செல்போன் மற்றும் டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைக்க இடம் ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்..." என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications