ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி: பிரேமலதா

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உடல் ஊனமுற்றோர்கள் 300 பேர் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அப்போது நிருபர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூட்டணி பேச முன்வந்தால் தேமுதிக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும்.
தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. விருத்தாசலம் எங்களது சொந்த தொகுதி. எப்போதுமே விஜயகாந்திற்கு தனி அக்கரை உண்டு.
அதனால் தான் அவர் இயக்கும் முதல் படத்திற்கு விருத்தகிரி என்று பெயர் வைத்து, இந்தப் படத்தின் முதல் காட்சியை விருத்தசாலத்தில் எடுக்க உள்ளோம்.
விருத்தாசலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை விஜயகாந்த் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வருகிறார். ஆட்சியர் செய்யத் தயாராக இருந்தாலும் உயர்மட்ட அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
வறுமை, விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் பணத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர். இதனால் எதிர்பார்த்த வாக்குகள் கிடைப்பதில்லை. மக்களிடையே தொலைநோக்கு பார்வை இல்லை. ஆனால் இந்த நிலை மாறும் என்றார்.












Click it and Unblock the Notifications