'ஹைஜாக்'-உஷார் நிலையில் ஏர் இந்தியா விமானங்கள்!

Subscribe to Oneindia Tamil

Air India
டெல்லி: பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடுகளில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்திருப்பதால் பாகிஸ்தான் செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து கூட இந்த கடத்தல் மேற்கொள்ளப்படலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவிலும் கூட இதைச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலும் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளிலும் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பர்மா தலைநகர் யாங்கூன், டாக்கா, கொழும்பு ஆகியவற்றில் ஏதாவது ஒரு நகரிலும், கடத்தல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை தகவல் கூறுகிறது.

இதையடுத்து ஏர் இந்தியா விமானங்களுக்குப் பாதுகாப்பாக விமானங்களில் ஸ்கை மார்ஷல்கள் எனப்படும் அதிரடி கமாண்டோக்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களுக்கும் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் இந்தியா அனுப்பியுள்ளது. அதில், தத்தமது நாடுகளில் செயல்படும் இந்திய விமான நிறுவனங்கள் உஷார் நிலையில் செயல்படுமாறு அறிவுறுத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+