முத்தூட் கொலை வழக்கு-சிபிஐயிடம் ஒப்படைப்பு
கொச்சி பிரபல முத்தூட் குழுமத் தலைவரின் மகன் பால் ஜார்ஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுமதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு்ளது.
இதுதொடர்பாக பால் ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் முத்தூட் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி பன்னூர்மாத் தலைமையிலான பெஞ்ச், விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே, இந்தக் கொலை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி விவரித்த மத்திய மண்டல ஐஜி வின்சன் பாலுக்கும், உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
காவல்துறை நேர்மையான முறையில் வழக்கை நடத்தவில்லை என்றும் நீதிமன்றம் கண்டித்தது.
ஜார்ஜ் முத்தூட்டின் மகனான பால் ஜார்ஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கும்பலால், செங்கணச்சேரி - ஆலப்புழா சாலையில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications