கேரளாவுக்கு செல்லும் கியாஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்!
நாமக்கல்: விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரி உரிமையாளரையும், டிரைவரையும் விடுதலை செய்யும் வரை கேரள மாநிலத்திற்கு எரிவாயு ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் இயக்குவதில்லை என்று தென்மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 31ம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் 'பாட்டிலிங் பிளான்ட்' அருகே உள்ள காரைப்பள்ளி என்ற இடத்தில் எரிவாயு ஏற்றிச்சென்ற லாரியும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பாக, டேங்கர் லாரி டிரைவர், உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவர்களை கேரள போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள, தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள், கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளரையும், டிரைவரையும் கேரள அரசு உடனே விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கேரளா செல்லும் எரிவாயு டேங்கர் லாரிகளை இயக்குவதில்லை என்று நாமகல்லில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த திடீர் போராட்டம், நேற்று நள்ளிரவு முதல் துவங்கியள்ளதால், கேரளாவில் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications