தெலுங்கானா சண்டையில எங்கள மறந்துறாதீங்க-ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை
சென்னை: கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் கிருஷ்ணா நீர் பகிர்வு ஒப்பந்தம் 1983ம் ஆண்டு ஏற்பட்டது. இதன்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதுவரை ஆந்திர அரசு முழு அளவு தண்ணீரை எந்த வருடமும் தந்ததில்லை. கடந்த ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்தது.
இந்த முறை செப்டம்பர் 15ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பரில் பருவ மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந் நிலையில் தெலுங்கானா பிரச்சனை காரணமாக கண்டலேறு அணை மூடப்பட்டது. இதனால் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவது முழுமையாக நின்றுவிட்டது. டிசம்பர் 15ம் தேதிக்குப் பிறகு பூண்டிக்கு தண்ணீர் வரவில்லை.
இந்த முறை கிருஷ்ணா தண்ணீர் மொத்தம் 4.14 டி.எம்.சி.தான் வந்திருக்கிறது. எனவே தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீரை விட வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது என்றாலும், தெலுங்கானா பிரச்சனையில் முழு கவனமும் செலுத்தி வரும் ஆந்திர அரசு தமிழகத்தின் கோரிக்கையை இதுவரை காதி்ல் வாங்கவே இல்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. வழக்கமாக பருவமழை காலத்தில் 10 டி.எம்.சி. அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் இருக்கும். ஆனால் தற்போது 7 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது. எனவே, கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் என்று ஆந்திராவுக்கு மீண்டும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
வீராணத்தில் இருந்து தற்போது சென்னைக்கு தண்ணீர் வருகிறது. எனவே இருக்கும் தண்ணீர் செப்டம்பர் வரை சென்னை நகருக்கு வினியோகம் செய்ய போதுமானது. என்றாலும் கண்டலேறு அணையில் 31.5 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.
எனவே தமிழகத்திற்குரிய தண்ணீரை ஆந்திர அரசு திறந்து விட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த தண்ணீர் வந்தால் தான் சென்னை நகரம், இந்த ஆண்டு கோடைக் காலத்தை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications