திருப்பூரில் பாஸ்போர்ட் இல்லாத 5 நைஜீரியர்கள் கைது!
திருப்பூர்: திருப்பூரில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த 5 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பாஸ்போர்ட், விசா இல்லாமல் பதுங்கியிருந்த ஒன்பது நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். அப்போது, காதர்பேட்டை, ராயபுரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தியதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் ஒரே பகுதியில் வசித்து வந்த 11 நைஜீரியர்களை பிடித்து, திருப்பூர் வடக்கு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையின் போது, சிலர் தங்கள் பாஸ்போர்ட் மும்பையில் இருப்பதாகவும், உடனடியாக வரவழைப்பதாகவும் தெரிவித்தனர். இதில், ஐந்து பேரிடம் பாஸ்போர்ட், விசா என எதுவுமே இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சினோன்சோ இம்மானுவேல் (28), சோசென்ட் (36), ஆன்டணி (36), சுக்குன்வெமேகா (36), குட்ஹோல் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
