நேபாள பகுதிகளை ஆக்கிரமிக்கும் இந்தியா: பிரசண்டா
காத்மாண்டு: நேபாள நாட்டின் நிலப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்து வருவதாக அந் நாட்டு மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய தலைவர்களில் சிலர் இன்னும் இங்கிலாந்து அரசின் காலனி ஆதிக்க மனநிலையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
இதனால்தான் நேபாள நாட்டின் பிரச்சனைகளில் தலையிட அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் மாவோயிஸ்ட் கட்சி நாட்டின் சுதந்திரத்தைக் கட்டிக்காக்க உறுதியாக உள்ளது. அயல்நாடுகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்தும் போராடுகிறது.
இந்திய-நேபாள எல்லையில் உள்ள கலாபனி, சுஸ்தா பகுதிகளில் நிலங்களை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவுடன் சண்டையிடுவது எங்கள் நோக்கமில்லை. ஆனால்,அதற்காக எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.
அதேபோல எந்த ஒரு அயல்நாட்டு சக்திக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம். எங்களுக்கு இந்திய நிலப்பரப்பில் ஒரு இன்ஞ் கூட தேவையில்லை. அதே போல எங்கள் பகுதியில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுத் தர மாட்டோம் என்றார் பிரசண்டா.












Click it and Unblock the Notifications