இலங்கை அதிபர் தேர்தல்-யாழ்ப்பாணத்தில் தொடர் குண்டுவெடிப்பு
கொழும்பு: இன்று இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நடந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் தமிழர்களிடையே பீதி நிலவுகிறது.
வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில், இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், நாவலி, மாணிப்பாய், நல்லூர் மற்றும் கொன்டவில் ஆகிய பகுதிகளுக்கிடையே இந்தத் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
மேலும் சில வாக்குப் பதிவு மையங்கள் மீதும் கையெறி குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் ஏற்பட்ட சேதம், உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை. ஆனால் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications