குவைத்: கார் பந்தய விபத்தில் 8 பேர் பலி, 7 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

Car Race
குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட கார் பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குவைத் நகரின் அருகே தோஹா என்ற இடத்தில் திங்கள் கிழமை நள்ளிரவு இந்த விபத்து நடந்துள்ளது.

பந்தயத்தில் கார்கள் வேகமாக சென்றுகொண்டிருந்த போது, இரண்டு கார்கள் திடீரென ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டன.

அசுர வேகத்தில் சென்றபோது இடித்துகொண்ட கார்கள், நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த கார்கள் மீதும் பயங்கரமாக மோதின.

இதில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் நொறுங்கின. அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் 14 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+