ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தாமல் சீர்குலைப்போம்-தெலுங்கானா அமைப்புகள்
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராடி வரும் பல்வேறு அமைப்புகள், ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை சீர்குலைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளன.
இந்த அமைப்புகள் அனைத்தும் மாணவர்கள் அமைப்புகளாகும்.
இதுகுறித்து ஒரு மாணவர் கூறுகையில், பாதுகாப்பு தருவோம் என்று ஐபிஎல் வாரியத்துக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்காமல், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து டிஜிபி கவலைப்படட்டும். நிச்சயம், ஒரு போட்டியைக் கூட இங்கு நடத்த விட மாட்டோம்.
தெலுங்கானா பிராந்தியமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி பொழுதுபோக்குவதற்காக கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்க முடியும்? என்றார்.
ஆந்திராவில்தான் ஐபிஎல் 3வது தொடரின் முதல் போட்டி நடப்பதாக இருந்தது. ஆனால் தெலுங்கானா போராட்டக்காரர்களால் பிரச்சினை ஏற்படலாம் என பயந்து அதை மும்பைக்கு சமீபத்தில்தான் மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் ஆந்திராவில் 4 போட்டிகளை நடத்த ஐபிஎல் தீர்மானித்துள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications