பிலிப்பைன்ஸில் விமானம் விழுந்து 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப் படை விமானம் விபத்துக்கு உள்ளாகி, கீழே விழுந்து நொறுங்கியதில் ஒன்பது பேர் பலியானார்கள்.
பிலிப்பைன்ஸின் கோடபேடோ நகர விமான நிலையத்தில் இருந்து நேற்று விமானப் படை விமானம் புறப்பட்டது. புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர் திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது. விமான விழுந்த பகுதியில் வீடுகள் இருந்ததால், மூன்று கட்டிடங்கள் இடிந்தன.
விமானத்தில் இருந்த விமானப் படை அதிகாரி உட்பட எட்டு பேர் இந்த விபத்தில் இறந்தனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 60 வயது பெண்மணியும் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications