ராமலிங்க ராஜூ 'போண்டி'-யுஎஸ் கோர்ட் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Satyam Raju
நியூயார்க்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், ஐடி சாம்ராஜ்ய மன்னன் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். அதுமட்டுமல்ல, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்துள்ளது இந்த நீதிமன்றம்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (கிட்டத்தட்ட ரூ.8000 கோடிகள்) நடந்த நிதி மோசடியை ஒப்புக்கொண்ட ராமலிங்க ராஜுவை சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.

ராஜூ, அவரது தம்பி ராமராஜு உள்பட இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 10க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

இந்தியாவில் நடக்கும் வழக்குகள் தவிர, அமெரிக்க நீதிமன்றத்திலும் ராஜூ மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு நடதக்கிறது. அமெரிக்க பங்குதாரர்கள் மற்றும் பங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு சத்யம் மற்றும் ராஜூ மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில், தாங்கள் பரம ஏழைகள் என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லாமணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபரில் மனு தாக்கல் செய்தனர்.

தங்கள் மனுவில், 'நாங்கள் பரம ஏழை (சரியாக சொன்னால் 'போண்டி' ஆகிவிட்டோம்) என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், "ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர்.

வெளிநாட்டு சிறையொன்றில் உள்ள அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

ராஜூவுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலம், நூற்றுக்கணக்கான வீடுகள், பல நாடுகளில் சொத்துகள் உள்ளன. இவை அனைத்தும் இப்போது சிபிஐ கஸ்டடியில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+