பரிகாரம்: தினமும் ஒரு ஆடு பலி கொடுக்கும் சர்தாரி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தினசரி ஆடு பலி கொடுக்கும் பரிகாரத்தை நடத்தி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுவரை ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி கொடுத்திருப்பது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரப்புக்கு பின்னர், அதிரடியாக அதிபர் பதவிக்கு வந்தவர் ஆசிஃப் அலி ஜர்தாரி. பெனாசிரின் கணவரான இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன.
பெனாசிர் கொல்லப்பட்ட பின்னர் 2007ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்துவிட்ட ஜர்தாரி தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந் நிலையில் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் ஒருபுறமிருந்தாலும், பலவிதமான பரிகாரத்தையும் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் டான் நியூஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், ஜர்சாரி தினமும் கறுப்பு ஆடு ஒன்றை பரிகாரத்துக்காக பலியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆடுகளை பலியிட்டால் தனக்கு தீய சக்திகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் எனவும் ஜர்தாரி நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பர்கதுல்லாவும் ஆடு பலி கொடுக்கும் விவகாரத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications