கோளாறு-ரன்வேயில் நிறுத்தப்பட்ட மதுரை விமானம்
சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்லவிருந்த பாரமவுண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடுத்தடுத்து இரு தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 61 பயணிகள் சுமார் இரண்டரை மணி நேரம் விமானத்திலேயே தவிக்க நேரிட்டது.
இன்று காலை 6.40 மணிக்கு இந்த விமானம் கிளம்பவிருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனை ஏற்பட்டதால் 10 நிமிடம் தாமதமாகவே கிளம்பியது.
ஆனால், விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்த நிலையில் அதன் ஒரு சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ரன்வேயிலேயே விமானம் நிறுத்தப்பட்டது.
கோளாறு சரி செய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானத்தில் பயணித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாநில அமைச்சர் கீதா ஜீவன், திமுக எம்பி ரித்தீஷ் உள்பட 61 பயணிகள் காலை 6.10 மணி முதல் 8.40 வரை விமானத்திலேயே தவித்தனர்.












Click it and Unblock the Notifications