செளதி அரேபியா போகிறார் மன்மோகன் சிங்-கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும்
டெல்லி: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள செளதி அரேபியப் பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதத் தொடக்கத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
இந்த பயணத்தின்போது தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் டெல்லி வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் வகையில் மன்மோகன் சிங்கின் பயணம் அமையும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து செளதி அரேபிய தூதர் பைசல் டிராட் கூறுகையில், மன்னர் அப்துல்லா இந்தியா வந்தபோது இரு நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய சகாப்தம் தொடங்கியது. இரு தரப்பு உறவுகளின் புதிய அத்தியாயத்தை அப்போது மன்னர் அப்துல்லா ஆரம்பித்து வைத்தார். தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் செளதி பயணம் மூலம் இது மேலும் வலுவடையும், விரிவடையும் என்றார்.












Click it and Unblock the Notifications