கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 147 நோய்கள் சேர்ப்பு
சென்னை: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக 147 நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 31 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனராம்.
ஏழை- எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால உடல் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிகள் ஆபரேஷன் செய்து நலம் பெற்று வருகிறார்கள். அரசே இதற்கான செலவை ஏற்றுக் கொள்கிறது.
இந்த திட்டத்தில் 53 வகையான நோய்களுக்கு மட்டும் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இப்போது மேலும் 147 நோய்கள் புதிதாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் சுப்புராஜ் கூறுகையில்,
கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.705 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 53 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பொது மக்களிடம் இருந்து மேலும் சில நோய்களை இத்திட்டத்தில் சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து 147 நோய்கள் இத்திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. இனி மொத்தம் 200 வகை நோய்களுக்கு இனி சிகிச்சை பெறலாம்.
அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது பன்றி காய்ச்சல் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது கொசுக்களால் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து ரத்த மாதிரிகள் ஓசூர், சிங்கப்பூர் ஆராய்ச்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை பெறப்படும் என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications