இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் லிப்டுடன் கூடிய மேம்பாலம்
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், 84 படிகள் ஏறி இறங்க வேண்டி இருந்ததால், நடை மேம்பாலத்தை யாரும் இதை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த நடைமேம்பாலத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக ரூ.60 லட்சத்து 88 ஆயிரம் செலவில் லிப்ட் வசதி செய்யப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்த வைத்தார்.
இதுதவிர நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் அவென்யூவில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட தெருக்கூத்து கலை சிற்பத்தையும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புலி ஆட்டம் கலை சிற்பத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்று பல இடங்களில் லிப்ட்' வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 3 இடங்களில் அமைக்கப்படுகிறது. சைதாப்பேட்டையில் ரூ.94 லட்சம் செலவிலும், புதிய தலைமைச் செயலகம் அருகே வாலாஜா சாலையில் ரூ.94 லட்சம் செலவிலும் 2 லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மக்களின் பயன்பாட்டினை அறிந்து பல இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்.
மேலும் இத்தகைய லிப்ட் வசதியை ஏற்படுத்திய மாநாகராட்சிக்கும் துணை முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
பெரம்பூர் மேம்பாலம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மேம்பால பணிகள் 99 சதவீதம் முடிந்து இறுதி கட்ட நிலைக்கு வந்துள்ளது. தற்போது, பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
பிப்ரவரி மாதம் இறுதியில், அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் பெரம்பூர் மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications