ராமேஸ்வரம்: ஆளில்லா உளவு விமானம் சோதனை

Subscribe to Oneindia Tamil

Unmanned Aerial Vehicle
ராமேஸ்வரம்: கடலோரப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கவும், பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானத்தை பெங்களூரைச் சேர்ந்த அரோரா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த விமானத்தின் சோதனை பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. அரோரா நிறுவனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அய்யர்,​​ பிரவீன் ஆகியோர் கடற்கரையில் இருந்தபடி இயக்கி,​​ விமான சோதனையை நடத்தினர்.​ ​

2.5 அடி நீளம்,​​ 2 அடி அகலம் கொண்ட குட்டி விமானத்தின் எடை 3 கிலோ உள்ளது.​ மேலும்,​​ துப்பாக்கிக் குண்டு துளைக்காமலும்,​​ கீழே விழுந்தால் சேதமடையாத வகையிலும் ஃபைபர் மூலம் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.​

இந்த ஆளில்லாத விமானம் மூலம் கடல் பாதுகாப்பு மட்டுமின்றி,​​ நிலப் பகுதியையும் ஆய்வு செய்ய முடியும்.​ 10 கி.மீ.​ சுற்றளவை கண்காணிப்பதோடு,​​ சுமார் 1 கி.மீ.​ தூரம் உள்ள படகுகளை துல்லியமாகப் படம் பிடிக்கும்.​

இரவிலும் படம் பிடிக்கும் வகையில் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.​ பேட்டரியில் இயங்கும் இந்த விமானத்தால் ஒரு மணி நேரம் வரை கடல் மீது பறக்க முடியும்.

ராமேஸ்வரம் கடலில் பாதுகாப்புப் பணிக்காக இந்த ஆளில்லாத உளவு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+