தாக்கரே குடும்பம் வாழும் கலையைக் கற்றுக் கொள்வது அவசியம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Subscribe to Oneindia Tamil

Sri Sri Ravishankar
டெல்லி: தாக்கரே குடும்பத்தினருக்கு வாழும் கலையைக் கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது பதட்டம் குறைந்து சாந்தமாவார்கள் என்று வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

டெல்லி வந்த ரவிசங்கர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தாக்கரே குடும்பத்தினருக்கு வாழும் கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். அவர்களும் இதைக் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அவர்களின் பதட்டம் குறைந்து சாந்தமடைவார்கள். அமைதிப் பாதைக்குத் திரும்புவார்கள்.

இந்தியாவின் ஒற்றுமைதான் அதன் பலம். சிறு சிறு பிரச்சினைகளை காரணமாக வைத்து அதை சிதைத்து விடக் கூடாது.

பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் வாக்குவாதங்களை தொடர்ந்து வந்தால், அது மேலும் சிக்கலாகத்தான் செய்யும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருங்கிணைந்த, ஒற்றுமையான இந்தியாவைத்தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர பாகுபாடு காண முயலக் கூடாது என்றார் ரவிசங்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+