உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு- ஸ்டாலின்
பெரம்பலூர்: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் பெரியார் நினைவு சமத்துவ புரத்தையும், பெரியார் சிலையையும் திறந்து வைத்து ரூ.97 கோடி மதிப்பிலான அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட ரூ.152 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார் ஸ்டாலின்.
அப்போது அவர் கூறுகையில், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தருமபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தருமபுரியில் இயங்க தொடங்கி விட்டது. மற்ற மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படும்.
மகளிர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1989-ம் ஆண்டே தமிழகத்தில் முதன் முதலில் மகளிர் சுயஉதவி குழுவை தருமபுரியில் திமுக தலைவர் தொடங்கி வைத்து இன்று இத்திட்டம் கம்பீரமாய் வளர்ச்சி கண்டுள்ளது.
12620 கிராமங்களுக்கு தலா 20 லட்ச ரூபாயும், 561 பேரூராட்சிகளுக்கும் தலா 50 லட்சமும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை முழுமையாக வழங்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்காக கடந்த 2008-ம் ஆண்டு அரசு ஆணை வெளியிடப்பட்டு 3072 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு இதுவரை 2293 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டபின், இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.
இத்திட்டம் நிறைவேறினால் இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணி வாய்ப்பினை பெறுவார்கள்.
மாநிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.80 வழங்கப்பட்ட கூலி தற்போது 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு, திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் திட்டத்தை கொண்டு வந்த போது, 1994-ம் ஆண்டு இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்து திமுக தலைவர் கருணாநிதி 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். வரும் உள்ளாட்சி தேர்தலில் அது 50 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்றார்.
முதல்வர்கள் மாநாடு-ஸ்டாலின் டெல்லி பயணம்:
இந் நிலையில் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
துணை முதல்வர் பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் டெல்லி செல்வது இதுவே முதல் முறையாகும்.
தனது பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் நாளை கூட்டியுள்ளார்.
2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் விலைவாசி உயர்வு பிரச்சினை தவிர்த்து, உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், பருப்பு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது பற்றியும் விளக்கி பேசுவார்.
தனது பயணத்தின்போது ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியை ஸ்டாலின் முக்கியமாக சந்திப்பார் என்று தெரிகிறது. தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் உள்ளார் மமதா.
இந்த நிலையில் டெல்லி செல்லும் ஸ்டாலின், மமதாவை நேரில் சந்தித்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
மேலும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து, திருப்பூர் சாயப்பட்டறை விவகாரம் தொடர்பாக அவரது கவனத்திற்குக் கொண்டு செல்வார் எனத் தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications