யாராவது கேட்டால்தான் ஆதரவு தருவோம், நாங்களாக தர மாட்டோம்- விஜய டி.ராஜேந்தர்
சென்னை: யாராவது எங்களது ஆதரவு வேண்டும் என்று கேட்டால்தான் தருவோம். நாங்களாக எங்களது சுய மரியாதையை விட்டுக் கொடுத்து ஆதரவு தருவதாக போய் நிற்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறியுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
லட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று தனது கட்சியின் புதிய கொடியை தனது வீட்டில் அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் லட்சிய திராவிட முன்னேற்றக்கழக கட்சியின் கொடியின் நிறம் கறுப்பு, நீலம், சிவப்பு என்ற மூவர்ண கொடியாக மாற்றம் செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் புதிய கொடியை ஏற்றி வைக்கிறேன்.
விலைவாசி உயர்வுக்காகவும், மறைமுக பேருந்து கட்டணம் உயர்வுக்காகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்துவது என்று பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளோம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டேன். ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட கருணாநிதி அழைத்ததால்தான் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தேன். அதே போல, தி.மு.க. கூட்டணி அழைத்தால் அப்போது பார்க்கலாம். நான் பரம்பரையாக தி.மு.க.காரன். கலைஞரை எதிர்த்து ஒரு தொகுதியில் நிற்கவேண்டும் என்று சொன்னபோது முடியாது என்று கூறினேன்.
ஜெயலலிதாவை குளிர்ச்சிப்படுத்துவதற்குத்தான் பென்னாகரம் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.
மின்னணு வாக்குப்பதிவை தவிர்க்கவேண்டும் என்று சொன்னவர், தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னவர் தேர்தல் கமிஷன் வைரவிழா நடக்கிறது என்று சொன்ன உடன் டெல்லிக்கு சென்று வந்துள்ளார். இதனால்தான் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திரைப்பட துறையினருக்கு பையனூரில் முதல்வர் கருணாநிதி இடம் ஒதுக்கியுள்ளதற்காக தமிழ் திரை உலகம் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளது. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்றார் ராஜேந்தர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications