புரட்சி நடத்தி ரஷ்ய பாணியில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டார் பொன்சேகா - இலங்கை

அதிபர் தேர்தலில் ராஜபக்சே வென்றார், பொன்சேகா தோற்றார். இதையடுத்து புரட்சி நடத்த முயன்றார், ராஜபக்சேவையும், குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்ட முயன்றார் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய பாணியில் ராணுவப் புரட்சி நடத்த பொன்சேகா திட்டமிட்டிருந்தாக அமைச்சர் யாப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜபக்சே அவரது சகோதரர்கள் கோத்தபய, பசில் ஆகிய 3 பேரையும் கொலை செய்த பிறகு ரஷிய பாணியில் ராணுவப் புரட்சிக்கு சரத்பொன்சேகா திட்டமிட்டிருந்தார்.
புரட்சியை நடத்தி முடித்த பின்னர் இலங்கையை நிர்வகிப்பதற்காக ரஷ்யாவில் முன்பிருந்த போல்ஷ்விக் குழுக்களைப் போல இங்கும் குழுக்களை அமைத்து நிர்வாகம் நடத்தவும், அரசு அலுவலகங்களை நிர்வகிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார் என்றார் யாப்பா.
இதற்கிடையே, 2வது முறையாக அதிபராகியுள்ள ராஜபக்சே இன்று முதல் வெளிநாட்டுப் பயணமாக ரஷ்யா போகிறார். அங்கு 9 நாட்கள் தங்கியிருப்பார். பெருமளவில் கடன் கேட்கவே அவர் ரஷ்யா போவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications