மார்ச் 7ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டடம் கட்டி முடியும் தருவாயில் உள்ளது.
இதற்கான, கட்டுமான பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மார்ச் 7 ம் தேதி காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் கட்டப்பட்டு வரும் தி.மு.க. அறிவாலயத்தை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மார்ச் 07 ம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளனர்.
அன்று, மாலை 4 மணியளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் திறந்து வைக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications